விடுகதை:
சாயந்திரம் கை பிடித்து
சாமத்தில் கருத்தரித்து
விடியும்போது தாயையும் பிள்ளையையும் பிரிச்சு விட்டாச்சு.
அது என்ன?
விடை:
பால், தயிர், வெண்ணை, மோர்
சாயங்காலம் மாட்டு மடியில் கைப்பிடித்து பால் கறப்போம். பாலை காய்ச்சி உரை மோர் கலப்போம். அது நள்ளிரவில் தயிராகி போய்விடும். திரும்பவும் காலையில் தயிரைக் கடையும்போது, மோரும் வெண்ணையும் பிரிந்துவிடும்.
இதுதான் அந்த விடுகதைக்கு அர்த்தம்.
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்…பசுமைப் போராளியின் வாழ்க்கை வரலாறு (நம்மாழ்வார், விகடன் பிரசுரம், பக்கம் 14)