என் அனுபவம் உங்களுக்குள் செய்தியாய் வந்து சேர, உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்படும் போது, மிக எளிதாக உங்களால் வாழ்வியலைக் கற்றுக்கொள்ள முடியும். சிறு வயதில் சைக்கிள் ஓட்டும் போது, பின்னால் சீட்டைப் பிடித்துக்கொண்டு தன் முழு பலத்தோடு உங்களை விட சற்று வயதான ஒரு ஸ்நேகிதன் ஓடி வருவான் இல்லையா, அது போலத்தான்.
நீங்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் பொழுது, நான் உங்கள் பின்னே சீட்டைப் பிடித்துக் கொண்டு ஓடி வருகிறேன். ஆனால், நீங்களாக சைக்கிள் ஓட்டி விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்பொழுது மிகச் சந்தோஷத்தோடு நான் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
‘கத்துகிட்டாண்டா…கத்துகிட்டாண்டா…அவனா ஓட்றான் பார்’ என்று ஆனந்தக் கூச்சலிடுவென்.
என்னைச் சுற்றி சில நடனங்கள், பாலகுமாரன்.